பொது

ETS மற்றும் KTMB பயணிகளுக்கு உணவு பைகள் அன்பளிப்பு

29/10/2024 07:49 PM

கோலாலம்பூர் , 29 அக்டோபர் (பெர்னாமா) -- இன்று கே.எல் சென்ட்ரலில் மற்றும் பட்டர்வெர்த் இரயில் நிலையத்தில் பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு KERETAPI TANAH MELAYU நிறுவனம், KTMB உணவு பைகளை அன்பளிப்பாக வழங்கியது.

ஆயிரம் பைகள் கே.எல் சென்ட்ரலில் இருந்து பயணிக்கும் ETS மற்றும் KTM சேவை பயணிகளுக்கும், 400 பைகள் பட்டர்வெர்த் நிலையத்திலிருந்து பயணிக்கும் மக்களுக்கும் வழங்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோ ஜனா சந்திரன் முனியன் தெரிவித்தார்.

''மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாங்கள் இதனை வழங்கியிருக்கிறோம். அனைத்து பெரிய பண்டிகைகளுக்கும் நாங்கள் இவ்வாறு வழங்குகிறோம். முறுக்கு, தண்ணீர் அடங்கிய உணவு பைகளை வழங்கியிருக்கிறோம்,'' என்றார் அவர். 

இந்த முயற்சி தீபாவளி பண்டிகைக்கு மட்டுமல்லாது இதர பண்டிகை காலங்களிலும் ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ளப்படும் என்று டத்தோ ஜனா சந்திரன் குறிப்பிட்டார்.

அதோடு, மக்களின் பாதுகாப்பான பயணத்தை தங்களது தரப்பு எப்போதும் கவனத்தில் கொள்ளும் என்று ஜனா சந்திரன் கூறினார்.

-- பெர்னாமா

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)