அயோத்தி, 31 அக்டோபர் (பெர்னாமா) -- வட இந்தியா. அயோத்தியின் சார்யூ நதிகரையில் நேற்று அங்குள்ள மக்கள் 25 லட்சத்து பத்தாயிரம் விளக்குகளை ஏற்றினர்.
தீபாவளியை முன்னிட்டு ஏழாவது ஆண்டாக இந்த கின்னஸ் சாதனையை அயோத்தி படைத்துள்ளது.
இந்தியாவில் தீபாவளி ஒரு முக்கியப் பண்டியாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அதில், வட மாநிலங்களில் ராமர் வன வாசம் முடித்து திரும்பிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு தீபாவளி அன்றும் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பிரம்மாண்ட விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
அதனை வரவேற்கும் வண்ணம், கடந்த ஆண்டு 22 லட்சத்து விளக்குகள் ஏற்றப்பட்ட நிலையில், இவ்வாண்டு அதன் எண்ணிக்கை 25 லட்சத்திற்கும் அதிகமாக பதிவானது.
எனவே, உலக கின்னஸ் சாதனைக் குழு உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி அத்யநாத்திடம் அதற்கான சான்றிதழை சமர்பித்தது.
இந்த முயற்சிக்காக, நேற்று புதன்கிழமை, ஆயிரக்கணக்கானோர் ஆற்றங்கரை, பாதைகள் மற்றும் வீட்டுக் கூரைகளில் விளக்குகளை ஏற்றினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)