லடாக், 31 அக்டோபர் (பெர்னாமா) -- இந்தியா– சீனா லடாக் எல்லையில் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
இந்தியா சீனா இடையே பல காலமாக எல்லைப் பிரச்சனை இருந்து வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளாக அதனை தீர்க்க இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்துவந்த நிலையில் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது.
அதன்படி, 2020 ஜூன் மாதத்துக்கு முன் இருந்த ஒப்பந்தம்படி, இரு நாட்டு ராணுவமும் ரோந்து செல்ல உடன்பாடு ஏற்பட்டது.
எனவே எல்லையில் இருந்து இரு நாட்டு படைகளும் முன்பிருந்த முகாம்களின் துாரத்துக்கு பின்னோக்கி செல்லும் நடவடிக்கை தொடங்கின.
இந்நடவடிக்கை தற்போது முடிவடைந்து விட்டதால், தீபாவளியை முன்னிட்டு நாளை இந்தியா- சீனா இடையே இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)