லண்டன், 02 நவம்பர் (பெர்னாமா) -- மன்செஸ்டர் யுனைடெட் அணியின் புதிய தலைமை பயிற்றுநராக போர்த்துகலின் ரூபன் அமோரிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் 11ஆம் தேதி தொடங்கி 2017ஆம் ஆன்டு ஜூன் மாதம் வரை 39 வயதான
ரூபன் அமோரிம் புதிய பயிற்றுநராக மன்செஸ்டர் யுனைடெட்டை வழிநடத்துவார் என்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அக்கிளப் தெரிவித்திருக்கிறது.
ரூபன் அமோரிம் பொறுப்பேற்கும் வரையில், ரூட் வான் நிஸ்டெல்ரூய் இடைகால நிர்வாகியாக தொடர்ந்து செயல்படுவார் என்று அக்கிளப் கூறியது.
கடந்த வாரம் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் மன்செஸ்டர் யுனைடெட் அடைந்த தோல்வியைத் தொடர்ந்து அதன் நிர்வாகி எரிக் தென் ஹாக் கடந்த திங்கட்கிழமை நீக்கப்பட்டார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி எரிக் தென் ஹாக் மன்செஸ்டர் யுனைடெட்டின் நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.
அவரின் தலைமையின் கீழ், MAN U 2023ஆம் ஆண்டில் லீக் கிண்ணத்தையும் 2024ஆம் ஆண்டு எஃப்.ஏ கிண்ணத்தையும் வென்றிருந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)