லிடிட்ஸ், 04 நவம்பர் (பெர்னாமா) -- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலின் அதிவேக பிரச்சாரத்தின்போது, குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தன்னை ஒரு "தோல்வியுற்ற தேசத்தின்" தலைவராக்கும்படி மீண்டும் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.
அதே சமயம், அமெரிக்கத் தேர்தல்கள் சட்டபூர்வமானது அல்ல, அவை சதித்திட்டம் நிறைந்தவை என்றும் சாடினார்.
பென்சில்வேனியாவில் வெளிப்புற பேரணியில் பேசிய முன்னாள் அதிபரான டிரம்ப்,
பொருளாதாரம், குடியேற்றம் மற்றும் அதிபர் போட்டியாளரும் துணை அதிபருமான கமலா ஹாரிஸ் மீதான தனது வழக்கமான விமர்சனங்களில் இருந்து சற்று விலகி, நாடு முழுவதும் வாக்களிக்கும் நடைமுறைகள் பற்றிய விமர்சனங்களை மீண்டும் தொடங்கினார்.
இது ஒரு ஊழல் மிகுந்த நாடு என்பதால், அதனை சரிசெய்ய நினைத்தால், சிறையில் அடைக்கப்படுவீர் என்று டிரம்ப் கூறியதோடு, வாக்களிப்பதற்கு முன் நன்கு யோசிக்கும்படியும் வலியுறுத்தினார்.
தமது தரப்பு முன்னதாக நிரூபித்திருப்பதால், மீண்டும் இம்முறை அதனை சரிசெய்ய, தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)