உலகம்

பாரம்பரிய நள்ளிரவு வாக்கெடுப்புடன் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான் வாக்களிப்பு தொடக்கம்

05/11/2024 05:16 PM

அமெரிக்கா, 05 நவம்பர் (பெர்னாமா) -- அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைய உள்ள வேளையில் அந்நாட்டின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு இன்று நடைபெறுகிறது.

வடக்கு நியூ ஹாம்ப்ஷரில் உள்ள, சிறிய நகரமான DIXVILLE NOTCH-இல்,  அதன் பாரம்பரிய நள்ளிரவு வாக்கெடுப்புடன் செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிபர் தேர்தல் தொடங்கியது.

வாக்களிப்பு தினத்தில் முதலாவது வாக்குகளைப் பதிவு செய்ய நள்ளிரவில் அந்நகரின் ஆறு வாக்காளர்கள் பல்சாம் ரிசோர்ட்டில் Tillotson அறையில் கூடினர்.

இங்கு வசிப்பவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக முதல் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

2020ஆம் ஆண்டு தேர்தலில், கனடிய எல்லைப்பகுதியின், வட White Mountains-சில் உள்ள சிறு சமூகத்தைச் சேர்ந்த ஐவர் தங்களின் முதலாவது வாக்குகளைப் பதிவு செய்தனர்.

நகரங்களிலும், Dixville Notch போன்ற ஒருங்கிணைக்கப்படாத சமூகங்கள் உள்ள இடத்திலும் நள்ளிரவில் வாக்குப்பதிவைத் தொடங்கி விரைவில் மூடவும் முடியும் என்பதை நிரூபித்தால் மட்டுமே அத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ள நியூ ஹாம்ப்ஷர் மாநில சட்டம் அனுமதிக்கிறது.

இந்த ஆண்டு Dixville Notch-சின் வாக்குகள், வாக்களித்த 15 நிமிடத்தில் எண்ணப்பட்டன.

அதில், துணை அதிபர் Kamala Harris-சுக்கும் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்க்கும் தலா மூன்று வாக்குகள் கிடைத்து சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இத்தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசுக்கும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனல்டு டிரம்புக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)