டாக்கா, 09 நவம்பர் (பெர்னாமா) -- தேர்தல் மற்றும் விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள கோரி, வங்காளதேச தலைநகர் டாக்காவில் அமைதி பேரணி நடத்தப்பட்டது.
நேற்று நடைபெற்ற இப்பேரணியை, அந்நாட்டின் உள்ள ஒரு முன்னணி அரசியல் கட்சி ஏற்பாடு செய்தது.
இப்பேரணியில் அக்கட்சியின் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்றக் கட்டிடத்தை அடைவதற்கு முன்பு டாக்காவில் உள்ள பல சாலைகளில் அவர்கள் அணிவகுத்துச் சென்றனர்.
நாட்டில் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இடைக்கால அரசாங்கம் எந்த சூழ்நிலையிலும் தோல்வியடைய அனுமதிக்கக் கூடாது என்று அக்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறினர்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்தினர்.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமைதிக்கான நோபல் விருது வென்ற முஹமாட் யுனூஸ் இடைக்கால அரசாங்கத்தை வழி நடத்தி வருகிறார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)