கொல்கத்தா, 12 நவம்பர் (பெர்னாமா) -- ஆகஸ்ட் மாதம், இந்தியா, கொல்கத்தாவில் அரசாங்க மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தன்னார்வல போலீஸ் ஒருவர் மீதான விசாரணை நேற்று தொடங்கியது.
இவ்வழக்கு, இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி, கொல்கத்தா, R.G. Kar மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வகுப்பு ஒன்றில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதில் ஈடுப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சஞ்சே ரோய் எனப்படும் தன்னார்வல போலீஸ் கைது செய்யப்பட்டதாக மத்திய போலீஸ் தெரிவித்தது.
எனினும், தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரோய் மறுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன.
2012-ஆம் ஆண்டு புது டெல்லியில் பேருந்து ஒன்றில் நடந்த கும்பல் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்குப் பிறகு கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதிலும், இவ்வழக்கு இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மீதான விமர்சனங்களை மீண்டும் தூண்டியுள்ளது.
மறைக்காணி மற்றும் போதுமான பாதுகாவலர்கள் இல்லாத அரசாங்க மருத்துவமனைகளில் போதிய பாதுகாப்பு உட்பட உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத குறைப்பாட்டையும் அது சுட்டிக்காட்டுகிறது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]