காஜாங், 16 நவம்பர் (பெர்னாமா) -- இணைய விற்பனைத் தளமான வேலட் ஃபேஷனுடன் தொடர்புடைய ஆடம்பர முத்திரையிலான ஹிஜாப் தயாரிப்பு நிறுவனமான, '30 MAPLE' நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது.
இந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது, இதற்கு முன்னர் முந்தைய வேலட் ஃபேஷன் கணக்கு முழுவதையும் கைப்பற்றுவதும் அடங்கும் என்று டத்தோ ஸ்ரீ அசாம் பாக்கி தெரிவித்தார்.
இவ்வழக்கு தொடர்பான விசாரணையை விரைவில் மேற்கொள்ளுமாறு தங்கள் தரப்பு உத்தரவிட்டுள்ளதாகவும் இன்னும் இரண்டு வாரங்களில் அது நிறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இன்று சிலாங்கூர், காஜாங்கில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான எஸ்.பி.ஆர்.எம்மின் குறிசுடும் போட்டியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அசாம் பாக்கி அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)