பொது

மூன்று கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டில் கம்போங் தெபாட் வெள்ளத் தடுப்பு திட்டம்

16/11/2024 06:55 PM

அலோர் காஜா, 16 நவம்பர் (பெர்னாமா) -- மலாக்காவில், 100 கோடியே 60 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடுகளை உள்ளடக்கி RTB எனும் ஏழு வெள்ளத் தடுப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மலாக்கா, கம்போங் தெபாட்டில், மூன்று கோடி ரிங்கிட் ஒதுக்கீட்டைக் கொண்ட முதலாம் கட்டம் RTB அலோர் காஜாவும் அதில் அடங்கும் என்று துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப் கூறினார்.

வெள்ள நீர்த்தேக்க குளம் மற்றும் ஆறுகளுக்குப் பாய்ச்சப்படும் நீர் ஓட்டத்தை எளிதாக்குவது போன்ற பல்வேறு நோக்கங்களைக் கொண்டு இத்திட்டம் செயல்படுவதாக டத்தோ ஸ்ரீ ஃபடில்லா  தெரிவித்தார்.

''மேலும் தாழ்வான பகுதிகள் நிரம்பி வழிவதை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் கட்டப்படும். இத்திட்டம் நிறைவடைந்து விட்டால் நாங்கள் மேற்கொண்ட ஆய்வின் படி இப்பகுதியில் உள்ள சுமார் 1,270 குடியிருப்பாளர்களை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க முடியும், '' என்றார் அவர்.

இன்று, மலாக்காவில் அம்மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப்புடன் இணைந்து RTB திட்டத்தை பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அதனை தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது இத்திட்டம் அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிறைவடையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக ஃபடில்லா யூசோப்  விளக்கினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30  (ஆஸ்ட்ரோ 502)