ஷா ஆலம், 24 நவம்பர் (பெர்னாமா) -- தற்போது நிலவி வரும் உள்நாட்டு வெள்ளை அரிசி பற்றாக்குறை விவகாரத்தைக் கையாள்வதற்குச் சிறப்பு செயற்குழு ஒன்று அமைக்கப்படும்.
இவ்விவகாரம், அமைச்சின் தலைமைச் செயலாளர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதோடு இதற்கான உரிய தீர்வுகள் வரையப்படும் என்று விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
இன்று ஷா ஆலமில் நடைபெற்ற சிலாங்கூர் மாநில அமானா கட்சியின் பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)