கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா) -- மடானி அரசாங்கத்தின் 2TM எனும் ஈராண்டு திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞர்களிடையே தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி டிவெட் சார்ந்த கண்காட்சிகள் கவனம் ஈர்த்த ஒன்றாக இருந்தது.
வேலைச் சந்தையில், டிவெட் கல்வியின் முக்கியத்துவவம் குறித்து பார்வையாளர்கள் அறிந்து கொள்ள பல்வேறு நவீன கருவிகளும் உபகரணங்களும் வைக்கப்பட்டன.
டிவெட் கல்வி கண்காட்சி மனித வள அமைச்சின்கீழ் நடைபெற்றது.
இலக்கவியல் மயமாக்கல் எவ்வாறு இன்றைய உலகில் கொண்டு வரப்படுகிறது என்பதனை அறிய, அங்கு தொழிநுட்பவியல் சார்ந்த அனுபவங்கள் பார்வையாளர்கள் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனிடையே, அச்சு ஊடகம் தொடர்பான புரிதல் மற்றும் அத்துறை சார்ந்த செயல்பாட்டில் நேரடியாக ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கமளிக்கப்பட்டது.
"இன்று உங்கள் சொந்த குறிப்பு புத்தகத்தை உருவாக்கும் அனுபவத்தை நாங்கள் தருகிறோம். இதற்கு முன்பு புத்தகம் வாங்கியிருப்போம்; அதன் செயல்முறையை அறிந்திருக்க மாட்டோம். ஆனால் நாங்கள், A முதல் Z வரையிலான செயல்முறை அனைத்தையும் உங்களுக்குக் காண்பிக்கின்றோம்.'' என்று உதவித் தொழிற்பயிற்சி அலுவலர் ஹாஷிம் சுலைமான் கூறினார்.
'MADANI di Hati, Rakyat Disantuni' என்ற கருப்பொருள் அடிப்படையிலான 2TM நிகழ்ச்சி, மக்களுக்கான அரசு துறைகளின் பல்வேறு சேவைகளுடன் இன்று மாலை நிறைவடைந்தது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)