கம்போங் சுங்கை சுவா, 24 நவம்பர் (பெர்னாமா) -- இன்று அதிகாலை சிலாங்கூர் காஜாங்கின், கம்போங் சுங்கை சுவா குடியிருப்பு பகுதியில் உள்ள கடை வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவம் தொடர்பில், பின்னிரவு 3.28 மணியளவில் தமது தரப்புக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் 21 பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அஹ்மட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, இரண்டு மாடி கடை வீட்டீன் மேல் பகுதியில் தீ பரவியிருந்ததாக அஹ்மட் முக்லிஸ் முக்தார் அறிக்கையின் வழியாக தெரிவித்திருந்தார்.
அதில் நான்கு உள்ளூரைச் சேர்ந்த நால்வர் கீழ்மாடியில் சிக்கிக் கொண்டனர்.
பின்னர், தீயணைப்புப் படையினர் பூட்டியிருந்த கதவை திறந்து 27 முதல் 58 வயதுக்கு உட்பட்ட இரு பெண்கள் மற்றும் இரு ஆடவர்களை வெளியேற்றினர்.
மூச்சுத் திணறல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)