உலகம்

மஹராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது மகாயுதி கூட்டணி

24/11/2024 06:55 PM

மஹராஷ்டிரா, 24 நவம்பர் (பெர்னாமா) -- இந்தியா மஹராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், அதிக வாக்குகள் எண்ணிக்கையில் பாரதிய ஜனதா தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகள் மற்றும் சிறந்த நிர்வாகத்தால் அம்மாநில சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மஹராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.

அவ்விரு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலிலுக்காகன் வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டதில் பாஜக 132 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

மஹராஷ்டிராவில் வளர்ச்சியும், சிறந்த நிர்வாகமும் வென்றிருப்பதால், இந்த வெற்றியைத் தொடர அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நரேந்திர மோடி தமது வெற்றிக் குறித்த மகிழ்ச்சியை சமூக ஊடகங்களில், பதிவு செய்துள்ளார்.

இதனிடையே, ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் எதிர்த்தரப்புக் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ஜார்க்கண்டைப் பொறுத்தவரை அங்கு ஆட்சி அமைக்க 41 இடங்கள் தேவை என்ற நிலையில் அங்கு பாஜக கூட்டணி 30 இடங்களில் முன்னிலையில் இருந்தது

காங்கிரஸ் கூட்டணி 49 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)