கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா) -- டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் மின்-ஹைலிங்கிற்குச் சிறந்த மற்றும் மலிவான இணையச் சேவையை வழங்குவதற்கான வழிமுறையைக் கண்டறியுமாறு தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டார்.
இணையத்தை அதிகம் பயன்படுத்தும் அவர்களின் சுமையைக் குறைக்க இது ஓரளவு உதவும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.
"டாக்சி ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ள சலுகைகள் இருந்தால், டெல்கோ நிறுவனத்துடன் கலந்தாலோசிக்க முயற்சிப்பேன், '' என்று ஃபஹ்மி கூறினார்.
கோலாலம்பூரில், ஞாயிற்றுக்கிழமை லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தில், 150 டாக்சி மற்றும் மின்-ஹைலிங் ஓட்டுநர்களுடனான நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)