கோலாலம்பூர், 24 நவம்பர் (பெர்னாமா) -- சிறார்களின் நலனை வலுப்படுத்தும் நோக்கில் மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு K-P-W-K-M இன்று புதிதாக சிறார் தேசிய கொள்கையை, அறிமுகப்படுத்தியது.
தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு குழந்தைகளின் பாதுகாப்பில் முன்னேற்றங்களை ஏற்படுத்துவதே இக்கொள்கைகளின் முதன்மை நோக்கம் என்று K-P-W-K-M அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி தெரிவித்தார்.
சிக்கல்களை எதிர்நோக்கும் சிறார்களை கையாள்வதில் GISB குழும நிறுவனத்தின் நடவடிக்கைகள், சில கொள்கைகளைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியத்தைத் தமக்கு உணர்த்தியதாகவும், அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்பவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நேன்சி கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் உள்ள உலக வர்த்தக மையம் WTCஇல், 2024 குழந்தைகள் தின கொண்டாட்ட விழாவின்போது அவர் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)