உலகம்

பி.ஏ.பி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர்

24/11/2024 07:04 PM

சிங்கப்பூர், 24 நவம்பர் (பெர்னாமா) -- 20 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் செயல் கட்சி பி.ஏ.பி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகினார் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ சியென் லுங்.

மூத்த அமைச்சராக இருக்கும், அவர் கடந்த மே மாதம் சிங்கப்பூர் பிரதமர் பதவியை லோரன்ஸ் வோங்கிடம் ஒப்படைத்தார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற பி.ஏ.பி கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு மற்றும் விருது வழங்கும் விழாவில் லீ சியென் லுங் அந்த பொறுப்பிலிருந்து விலகியதை அடுத்து, அக்கட்சியின் அடுத்த தலைமைச் செயலாளராக லாரன்ஸ் வோங் பதவியேற்கிறார்.

இதுவரை தமக்கு துணையாகவும் ஆதரவாகவும் நின்ற அனைத்து தரப்புக்கும் 72 வயதுடைய லீ தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து கடினமாக உழைக்கும்படி அவர் பி.ஏ.பி கட்சி உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.

சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2004ஆம் ஆண்டு சிங்கப்பூர் பிரதமராக பதவியேற்ற மூன்று மாதங்களுக்குப் பிறகு லீ பி.ஏ.பி கட்சி தலைமை பொறுப்புக்கு வந்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)