கோலாலம்பூர், 25 நவம்பர் (பெர்னாமா) -- 1998ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம், சட்டம் 588-ஐ திருத்தம் செய்வதற்கான பரிந்துரை இம்மாதம் 22ஆம் தேதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட வேளையில், அது வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அச்சட்ட திருத்தப் பரிந்துரையில் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, அதன் பயன்பாடு மற்றும் அதைச் சார்ந்திருப்பது அதிகரிப்பு ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படும் என்று தொடர்பு துணை அமைச்சர் தியோ நி சிங் கூறினார்.
"இணைய அச்சுறுத்தல்களைக் கையாள தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி, தொழில்நுட்பப் பயன்பாடும் அதைச் சார்ந்திருப்பதும் அதிகரித்து வருவது ஆகியவை ஆராய்ந்து கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. பயனீட்டாளர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் இணைய தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரவும் விவகாரத்தையும் அது உள்ளடக்கியுள்ளது", என்று அவர் கூறினார்.
இன்று, மக்களவையில் தெனோம் நாடாளுமன்ற உறுப்பினர் ரிடுவான் ரூபின் எழுப்பிய கேள்விக்கு தியோ நி சிங் அவ்வாறு பதிலளித்தார்.
போலிச் செய்திகள் உட்பட சமூக ஊடகங்களில் நிகழும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இணையப் பாதுகாப்பு சட்ட மசோதாவை அரசாங்கம் தாக்கல் செய்யவிருப்பதாகவும் தியோ தெரிவித்தார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)