சிங்கப்பூர், 28 நவம்பர் (பெர்னாமா) -- சிங்கப்பூரில் சூதாடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
அந்த எண்ணிக்கை கடந்த 18 ஆண்டில் இல்லாத அளவாகக் குறைந்துள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பிரச்சனைக்குரிய சூதாட்டம் தொடர்பில், அந்நாட்டின் தேசிய மன்றம் மேற்கொண்ட ஆய்வில். மூவாயிரம் பேர்வரை பங்கேற்றனர்.
அதில், 40 விழுக்காட்டினர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக கூறிய வேளையில், 2020 அது 44 விழுக்காடாகும்.
ஆனால், 2017 அது 52 விழுக்காட்டில் இருந்தது.
எண்ணிக்கை படிப்படியாகக் குறைகிறது. ஆனால் தொகையோ அதிகரிக்கிறது.
சூதாட்டத்துக்காக மாதந்தோறும் சராசரியாக இப்போது ஒருவர் 25 வெள்ளிச் செலவிடுவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது. .
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)