அராவ், 25 நவம்பர் (பெர்னாமா) -- பெர்லிஸ் மாநிலத்தின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அம்மாநிலத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக பதவி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அப்பொறுப்பில் ஏற்கனவே இருந்த இருவர் அதிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர்.
கோலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் அபு பகார் ஹம்சா, குவார் சஞ்சி சட்டமன்ற உறுப்பினர் முஹமட் ரிட்சுவான் ஹஷிம் மற்றும் செனா சட்டமன்ற உறுப்பினர் டத்தின் மர்சித்தா மன்சோர் ஆகிய மூவரும் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக இன்று இஸ்தானா அராவில், ராஜா பெர்லிஸ் துவாங்கு சைட் சிராஜூடின் ஜமாலுல்லைல் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.
பெர்லிஸ் மந்திரி புசார் முஹமட் ஷுக்ரி ரம்லியும் இதில் கலந்து கொண்டார்.
பாவ் மற்றும் தம்புன் துலாங் சட்டமன்றங்களின் உறுப்பினர்களான முறையே மெகாட் ஹஷிராட் ஹசானும் வான் சிக்ரி அஃப்தார் இஷாக்கும் ஆட்சி குழு உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேறுகின்றனர்.
அதேவேளையில், நடப்பிலுள்ள ஐந்து ஆட்சிக் குழு உறுப்பினர்களும் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டப் பின்னர் இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)