பொது

ஐந்து வாகனங்கள் விபத்து; பயணிகள் உயிர் தப்பினர்

17/12/2024 07:51 PM

கெனிங்காவ், 17 டிசம்பர் (பெர்னாமா) -- இன்று ஜாலான் கிமானிஸில் 11ஆவது கிலோ மீட்டர் தொலைவில் விபத்து ஒன்று நிகழ்ந்தது.

நண்பகல் மணி 12.50-க்கு நிகழ்ந்த இந்த விபத்தில் ஐந்து வாகனங்களின் பயணிகள் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் உயிர் தப்பினர்.

எனினும், 6 டன் லாரி ஓட்டுநரின் இரு உதவியாளர்கள் காயமடைந்தனர்.

ஒரு டிரெய்லார் லாரி உட்பட இரு லாரிகள், மூன்று கார்கள் உட்படுத்தி இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக கெனிங்காவ் மாவட்ட போலீஸ் தலைவர் தெரிவித்தார்.

ஜாலான் கிமானிஸ் வழியாக கெனிங்காவ் நோக்கி சென்றுக் கொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)