லண்டன், 17 டிசம்பர் (பெர்னாமா) -- மென்செஸ்டர் சிட்டிக்கு எதிராக களமிறங்குவதற்கு முன்பாகவே, மென் யுனைடெட் அணியில் மார்கோஸ் ராஷ்போர்ட், அலெயேன்ட்ரோ கர்னாச்சோ இடம்பெறவில்லை என்ற தகவல் கசிந்துள்ளது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ ஆட்டக்காரர்கள் பட்டியலில் அந்த இரண்டு ஆட்டக்காரர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
மென் யுனைடெட் அணியில் இடம்பெறவிக்கும் முதல் 11 ஆட்டக்காரர்களின் பெயர் பட்டியல் முன் கூட்டியே கசிவது தொடர்பில் அந்த கிளப்பின் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
இதன் தொடர்பாக மத்திய திடல் ஆட்டக்காரர் அமாட் டியால்லோ, கார்னோச்சோவிடம் அமோரிம் விசாரணை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் கார்னாச்சோவின் சகோதரரிடம் அமோரிம் இது குறித்து விசாரித்திருப்பதாக கூறப்படுகிறது.
மென் யுனைடெட் களமிறக்கவிருக்கும் அணி குறித்த தகவல்கள் கசிவதை தடுப்பதற்கு சிரமம் என அமோரிம் கூறுகிறார்.
அந்த அணியில் இடம்பெற்றுள்ள ஆட்டக்காரர்கள் சக நண்பர்களிடம், முகவர்களிடமும் பேசுவதால் இதனை தடுக்க இயலாது என அவர் மேலும் தெரிவித்தார்.
-- பெர்னாமா