பொது

சாலை விபத்தில் பல்கலைக்கழக மாணவிகள் இருவர் பலி

26/12/2024 05:22 PM

மலாக்கா, 26 டிசம்பர் (பெர்னாமா) --   இன்று காலை, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் 186.7-வது கிலோ மீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் பொது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மாண்டனர்.

இவர்கள் பயணித்த கார், சாலை தடுப்பை மோதியதால் விபத்து ஏற்பட்டது.

காலை மணி 6.20 அளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் 19 வயதான நூருல் ஷஃபிகா நசாருடின் மற்றும் நூர்ஹன்னிஸ் அஃப்ரினா அசிசான் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் DSP அஹ்மட் ஜமில் ரட்சி தெரிவித்தார்.

இதனிடையே, அக்காரில் பயணித்த 19 வயது நூர் ஹனிஸ் சுராயா சுஃபியான் மற்றும் 21 வயது அஸ்வலிடியா அச்மான் ஆகிய இருவர் காயங்களுடன் உயிர்த் தப்பினர்.

இவ்வழக்கு, 1987-ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் செக்‌ஷன் 41 உட்பிரிவு ஒன்றின் கீழ் விசாரிக்கப்படுகிறது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)