லண்டன், 26 டிசம்பர் (பெர்னாமா) -- டென்னிஸ் உலகின் முதன் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா, வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் பட்டத்தை மூன்றாவது முறையாகத் தக்கவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
பெலாருஸ் நாட்டைச் சேர்ந்த அவர், தமது இலக்கை அடைய வேண்டும் என்பதால், விளையாட்டு பாணியில் உள்ள அனைத்து பலவீனங்களையும் மேம்படுத்துவதில் உறுதியாக உள்ளார்.
இவ்வாண்டில், சபலென்கா ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியில், சிறந்த சாதனை படைத்துள்ளார்.
கடந்தாண்டில், நடந்த இறுதிப் போட்டியில் அவர் கசக்ஸ்தானின் எலினா ரெபாகினாவை தோற்கடித்தார்.
இவ்வாண்டில், சீனாவின் இளம் நட்சத்திரமான சேங் குவேனை தோற்கடித்து தனது பட்டத்தை வெற்றிகரமாக தற்காத்தார்.
26 வயதான அவர், இந்த பருவத்தில் அவர் தொடர்ந்து சிறந்து விளங்கினார்.
-- பெர்னாமா