ஹனோய், 26 டிசம்பர் (பெர்னாமா) -- வியட்நாம், ஹனோயில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்ட நோயாளியின் இடது கண்ணிலிருந்து 14 சென்டிமீட்டர் நீளமுள்ள புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
68 வயதுடைய அந்நோயாளி தமது இடது கண்ணில் அசௌகரியத்தை அனுபவித்துள்ளார்.
பின்னர், அவர் ஹனோய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மருத்துவ பரிசோதனையின் போது, 14 சென்டிமீட்டர் நீளமும் 0.5 மில்லிமீட்டர் அகலமும் கொண்ட ஒரு புழு போன்ற ஒட்டுண்ணி அவரது கண்ணின் வெள்ளை நிற பகுதியின் கீழ் நகர்வதை மருத்துவர் கண்டறிந்துள்ளனர்.
பின்னர், அப்புழுவை உடனடியாக மருத்துவர்கள் கண்ணிலிருந்து அகற்றியுள்ளனர்.
இதனிடையே, இச்சம்பவம் அவ்வாட்டாரத்தில் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)