கோலாலம்பூர், 26 டிசம்பர் (பெர்னாமா) - வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, தொடர்ந்து மூன்று நாள்களுக்கு கிளாந்தானில் உள்ள ஒன்பது இடங்களில் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை, ஜே.பி.எஸ் கணித்துள்ளது.
தும்பட், பசிர் மாஸ், கோத்தா பாரு, பாசிர் பூத்தே, பச்சோக், தானா மேரா, மச்சாங், கோலா க்ரை மற்றும் ஜெலி ஆகியவையே குறிப்பிட்ட இடங்களாகும் என்று ஜே.பி.எஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தும்பட் வட்டாரத்தில் சுங்கை கோலோக், சுங்கை கிளாந்தான் மற்றும் சுங்கை பெங்கலான் நங்காவில் வெள்ளப் பாதிப்பு அதிகமாகும் என்று ஜே.பி.எஸ் அதன் அறிக்கையில் கூறியுள்ளது.
அதற்காக, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால்,
குறிப்பிட்ட இடங்களில் மழை தொடர்ந்தால் வெள்ளம் குறித்த எச்சரிக்கைகள் விடுக்கப்படும் என்றும் ஜே.பி.எஸ் கூறியுள்ளது.
எனவே, வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும.
அதோடு, அதிகாரிகள் மற்றும் பேரிடர் நிர்வகிப்பு நிறுவனங்களின் அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)