செந்தூல், 27 டிசம்பர் (பெர்னாமா) -- இம்மாதம் 23-ஆம் தேதி வரை, ஸ்புமி எனப்படும் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்து 730 தொழில்முனைவோருக்கு தெக்குன் வழியாக 5 கோடியே 79 லட்சத்து 70 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட 6 கோடி ரிங்கிட் நிதியிலிருந்து அத்தொகை வழங்கப்பட்டிருப்பதாக, துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனின் மூத்த அந்தரங்கச் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் கூறினார்.
''மொத்தம் 57 மில்லியன். குறிப்பாக இந்திய வணிகர்கள் பயனடைந்துள்ளனர். இதுதான் முக்கியம். ஏனென்றால், இந்த எண்ணிக்கை, இன்னும் 2.1 மில்லியன் இருக்கின்றது. அது கூடிய விரைவில் இவ்வாண்டுக்குள் நிறைய விண்ணப்பங்கள் வந்திருக்கின்றன. அது முழுமையாகப் பூர்த்தி அடைந்த பிறகு, இன்னும் அடுத்தாண்டு இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கப்படும் என்று டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் உறுதியளித்திருக்கிறார்'', என்று அவர் கூறினார்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற இந்திய தொழில்முனைவோருக்கான, தெக்குன் நேஷனலின் காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், அவர் செய்தியாளர்களிடம் அத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)