தோக்கியோ, 27 டிசம்பர் (பெர்னாமா) -- 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வரைவுக்கு ஜப்பான் அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதில் 554 கோடி அமெரிக்க டாலர் அந்நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதலாம் தேதி தொடங்கி, இந்த வரவு செலவுத் திட்டம் அமலுக்கு வரும்.
அடுத்த மாதம் அந்த வரவு செலவுத் திட்ட வரை மீண்டும் நாடாளுமன்றத்தில் சரிபார்க்கப்படும் என்று உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கல்வித் துறைக்காக மூவாயிரத்து 517 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
சில குறிப்பிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை ஈடுகட்டக் கூடுதல் நிதி ஆதாரங்களை ஜப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை.
இதனை ஈடுசெய்ய, பெருநிறுவன வரிகளை உயர்த்த முன்னாள் பிரதமர் ஷிகெரு இஷிபா முன்மொழிந்திருந்தார்.
இருப்பினும் அதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)