ஜார்ஜ் டவுன், 27 டிசம்பர் (பெர்னாமா) -- வழக்கறிஞர் ஒருவரைக் காயமடையும் வரை தாக்கப்பட்ட விவகாரத்தில் 22 பேரை போலீஸ் கைது செய்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 22-ஆம் தேதி, பினாங்கு, ஜார்ஜ் டவுன், பெர்சியாரான் கர்பால் சிங்கில் உள்ள ஒரு கடைக்கு முன்புறத்தில் வழக்கறிஞர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டதாக, வடகிழக்கு பினாங்கு மாவட்ட போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரசாக் முஹமட் உறுதிப்படுத்தினார்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ முக்கிய 22 சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பினாங்கு சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அந்த 22 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தின் முதன்மை சந்தேக நபராக கருதப்படும் குத்தகையாளராக பணியாற்றும் 46 வயதுடைய ஆடவர் ஒருவர் பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, குற்றவியல் சட்டம் செக்ஷன் 324 மற்றும் 109-இன் கீழ் அவ்வாடவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)