சிங்கப்பூர், 27 டிசம்பர் (பெர்னாமா) - 2024 ஆசியான் கிண்ண காற்பந்து போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் வியட்நாம் 2-0 என்ற கோல்களில் சிங்கப்பூரை வீழ்த்தியது.
சிங்கப்பூரின் சொந்த இடமான ஜாலான் புசார் அரங்கில் நடைபெற்ற அவ்வாட்டத்தில் வெற்றியைத் தனக்கு சாதகமாக்க வியட்நாம் இறுதிவரை கடினமாக போராடியது.
அரையிறுதி வரை முன்னேறிய இரு அணிகளும் பலம் பொருந்தியது என்பதால் முதல் பாதியை ஆக்கிரமித்தன.
இருப்பினும், கோல் ஏதுமின்றி முதல் பாதி ஆட்டம் நிறைவடைந்தது.
10-வது நிமிடத்திலேயே முதல் கோலை அடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தும் வியட்நாமுக்கு அது பலனிக்காமல் போனது.
அதேபோல, இரண்டாம் பாதியில், சிங்கப்பூருக்கும் அதே போன்ற வாய்ப்பு கிடைக்க அதுவும் ஆஃப்சைடு கோலாகி கைநழுவியது.
பின்னர், ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் சிங்கப்பூர் ஆட்டக்காரர் செய்த தவற்றால் வியட்நாமுக்குப் பினால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது.
அதனை லாவகமாக கோலாக்கிய வியட்நாம், மேலும் கூடுதல் நிமிடங்களில் மற்றுமொரு கோலை அடித்து தனது வெற்றியை உறுதி செய்தது.
2008 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் ஆசியான் கிண்ண வெற்றியாளரான வியட்நாம்,
வரும் ஞாயிற்றுக்கிழமை, சிங்கப்பூரைத் தனது சொந்த அரங்கில் இரண்டாம் அரையிறுதி ஆட்டத்திற்காக சந்திக்கவிருக்கின்றது
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)