பிரேசில், 28 டிசம்பர் (பெர்னாமா) -- வடக்கு பிரேசிலில் உள்ள குபிட்செக் டி ஒலிவேரா பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, மரன்ஹாவோ மற்றும் டோகன்டின்ஸ் மாநிலங்களை இணைக்கும் அப்பாலம் இடிந்து விழுந்ததில், அதில் பயணித்த வாகனங்கள் மற்றும் பயணிகள் டோகன்டின்ஸ் ஆற்றில் மூழ்கியதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
கடந்த வியாழக்கிழமை, சம்பவ இடத்திலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஒரு உடலைக் கண்டெடுத்துள்ள நிலையில், மறுநாள் மற்றொரு உடலை கண்டெடுத்ததாக, பிரேசில் கடற்படை வீரர்கள் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
முன்னதாக, 10 பேர் பலியாகியதோடு, மேலும் எழுவரைக் காணவில்லை என்று கடற்படை வீரர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், வியாழக்கிழமை வரையில் 8 பேர் பலியாகி இருப்பதாகவும் 9 பேர் காணவில்லை என்று கூறப்பட்டதில் அதன் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, சுமார் 70-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)