ஜார்ச்டவுன், 28 டிசம்பர் (பெர்னாமா) -- பினாங்கில், குறிப்பாக பெருநாள் காலம் மற்றும் மிகப் பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது அதிகரித்து வரும் அந்நிய மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணிகள் தங்குவதற்கான தங்கும் விடுதிகளின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலவுகிறது.
தற்போது, அம்மாநிலத்தில் சுமார் 12,000 தங்கும் விடுதிகள் மட்டும் செயல்படுகின்றன.
எனினும், சுற்றுப் பயணிகளுக்குத் தங்கும் வசதியை ஏற்படுத்த இன்னும் அதிகமான, குறிப்பாக செபெராங் பிறை பகுதியில் தங்கும் விடுதிகள் தேவைப்படுவதாக பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ் தெரிவித்தார்.
இன்று, பயான் லெப்பாசில், Iconic Marjorie தங்கும் விடுதியைத் திறந்து வைத்தப் பின்னர் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜனவரி தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் பினாங்கு அனைத்துலக விமான நிலையம் வழியாக சுமார் 61 லட்சத்து 80 ஆயிரம் உள்நாடு மற்றும் அந்நிய சுற்றுப் பயணிகள் பினாங்கிற்கு வருகை புரிந்துள்ளனர்.
இது கடந்தாண்டைக் காட்டிலும் 7.46 விழுக்காட்டு உயர்வைக் காட்டுவதை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)