விளையாட்டு

சீ போட்டிக்கு முன்னர் மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் புதியக் கட்டிடம் முழுமைபெறும்

28/12/2024 06:32 PM

கோலாலம்பூர், 28 டிசம்பர் (பெர்னாமா) --   மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும், 2027-ஆம் ஆண்டு சீ விளையாட்டுப் போட்டிக்கு முன்னர் மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் புதியக் கட்டிடம் முழுமையாக பூர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது.

எனினும், அப்போட்டி நடைபெறுவதற்கு முன்னர், ஜாலான் ஹங் ஜெபாட், விஸ்மா எம்.ஒ.எம்-மில்
இருந்து, புக்கிட் ஜாலில் உள்ள புதிய அலுவலகத்திற்கு மாறுவதற்கான செயல்முறையை மேற்கொள்வது சற்று சவாலானது என்பதை அதன் பொதுச் செயலாளார் டத்தோ முஹமட் நாசிஃபுசின் நஜீப் ஒப்புக் கொண்டார்.

எனவே, தேசிய ஹாக்கி அரங்கிற்கு அருகில் இருக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தை மலேசிய அரங்க அமைப்பிடமிருந்து குத்தகைக்குப் பெற எம்.ஒ.எம் முடிவெடுத்துள்ளது.

"அந்த நிலத்தை குத்தகைக்குப் பெற பி.எஸ்.எம்-இடம் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிலத்தில் புதிய ஒலிம்பிக் அலுவலகத்தைக் கட்டுவதற்கு, நாங்கள் எம்.ஆர்.சி.பி உடன் எங்களின் கட்டிடத்தையும் நிலத்தையும் மாற்றிக் கொள்ளவிருக்கிறோம்", என்று அவர் கூறினார்.

இன்று, கோலாலம்பூரில் உள்ள மெர்டேக்கா அரங்கில் 2024-ஆம் ஆண்டு மலேசிய கிட்லிம்பிக்சைத் தொடக்கி வைத்தப் பின்னர் அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)