புதுடெல்லி, 28 டிசம்பர் (பெர்னாமா) -- கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி, வயது முதிர்வால் காலமான முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் நல்லுடல் முழு அரச மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க, இன்று தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, 92 வயதான அவரின் நல்லுடல், இன்று காலை புதுடெல்லியில் உள்ள அவரது காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
யமுனை நதிக்கரையில் உள்ள நிகம்போத் காட் மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
புட்டான் மன்னர், ஜிக்மி கேசர் நாம்கேல் வாங்சுக் அவரின் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)