கோலா கங்சார், 28 டிசம்பர் (பெர்னாமா) -- சீனப் பெருநாள், ரமலான் மற்றும் நோன்புப் பெருநாள் உட்பட அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடர்ந்து கொண்டாடவிருக்கும் பெருநாட்களின்போது தேங்காய் விநியோகிப்பு போதுமானதாக இருப்பதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளித்துள்ளது.
ஏற்றுமதி செய்வதன் மூலம் அதன் விநியோகத்தை அதிகரிப்பதை உறுதிசெய்ய, FAMA குழும நிறுவனம் போன்ற சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அமைச்சு தரப்பு பேச்சு நடத்தி வருவதாக விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஶ்ரீ முஹமட் சாபு தெரிவித்தார்.
"தற்போது தென்னை அதிகமாக பயிரிட வேண்டும். இதற்கு காரணம், நமக்கு தேங்காய் ஏற்றுமதி செய்யும் நாடு, உள்நாட்டில் அதன் பயன்பாட்டிற்கும் தேவைப்படுவது நமக்குத் தெரியும். எனவே, அதன் தேவையைப் பூர்த்தி செய்ய நாம் தென்னையை அதிகம் பயிரிட வேண்டும். தேங்காய்ப்பால் விலை தற்போது மிக அதிகம்", என்று அவர் கூறினார்.
இன்று, பேராக், மர்டி கோலா கங்சாரில், தாமான் எக்ரோ டுரியோதூரிசமிற்கு அலுவல் பயணம் மேற்கொண்டபோது முஹமட் சாபு அவ்வாறு குறிப்பிட்டார்.
தற்போது தேங்காய்ப்பால் விலை அதிகமாக விலை இருப்பதைத் தொடர்ந்து உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்ய உள்நாட்டில் தென்னை பயிரிடுபவர்கள் அதன் உற்பத்திய அதிகரிக்க வேண்டும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)