கோலாலம்பூர், 29 டிசம்பர் (பெர்னாமா) -- திரெங்கானு மாநிலத்தில் நாளை வரை தொடர் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
பகாங் குவாந்தானிலும், கிளந்தானின் ஜெலி, தானா மெரா, மாச்சாங், பாசிர் புத்தே மற்றும் கோலா கிராய் ஆகிய பகுதிகளிலும் அதே வானிலை நிலவும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம், மெட் மலேசியா தெரிவித்திருக்கிறது.
மேலும், கிளந்தான் மாநிலத்தின் தும்பாட், பாசிர் மாஸ், கோத்தா பாரு, பாச்சோக் மற்றும் குவா முசாங் ஆகிய பகுதிகளிலும் நாளை வரை தொடர் மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பகாங்கில் ஜெராந்துட், மாரான், பெக்கான் மற்றும் ரொம்பினிலும், ஜோகூரின் மெர்சிங்கிலும் தொடர் மழை பெய்யும் என்று மெட் மலேசியா, இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியுள்ளது.
அதே வேளையில், சபா தம்புனான், பந்தாய் பாராட், தாவாவ், லாஹட் டத்து, சண்டாக்கான், துலிப்பிட், கினாபாத்தாங்கான், பெலுரான் மற்றும் குடாட் ஆகிய பகுதிகளிலும் அதே வானிலை நிலவும்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)