உலகம்

டெல்ரெய் கடற்கரை பகுதியில் தீயணைப்பு வாகனத்தை மோதிய இரயில்

29/12/2024 05:31 PM

ஃபுளோரிடா, 29 டிசம்பர் (பெர்னாமா) -  ஃபுளோரிடாவின் டெல்ரெய் கடற்கரை பகுதியில் ரயில் ஒன்று தீயணைப்பு வண்டியை மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று தீயணைப்பு வீரர்களும் 12 ரயில் பயணிகளும் காயமடைந்தனர்.

இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

காயமடைந்த மூன்று தீயணைப்பு வீரர்களும் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் தற்போது அவர்கள் சீரான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சொற்ப காயங்களுக்கு ஆளான 12 ரயில் பயணிகளும் பால்ம் கடற்கரை பகுதி தீயணைப்பு மீட்பு படை உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)