ஆப்கானிஸ்தான், 29 டிசம்பர் (பெர்னாமா) - கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பக்திகாவ மாகாணத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள்களில் பெண்கள், சிறுவர்கள் என்று குறைந்தது 51 பேர் உயிரிழந்த சம்பவத்தில் பாகிஸ்தான் இறையாண்மையை மீறியுள்ளதாக ஆப்கானிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களை குறிவைத்தே தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்திகாவில் உள்ள பர்மால் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களில் நான்கு இடங்களில் வான் வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
அதில், பாகிஸ்தான் விமானப்படையின் தாக்குதலுக்கு ஆளான கிராமங்களில் ஒன்றான மொர்காவில் குறைந்தது ஆறு வீடுகள் அழிந்ததோடு 18 பேர் உயிரிழந்தனர்.
வான்வழித் தாக்குதலினால் ஏற்பட்ட பாதிப்புகளை விசாரிப்பதற்காக, ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதிகள் மற்றும் பழங்குடியினர் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சரான Alhaji Mullah Noorullah Noori, வெள்ளிக்கிழமை பர்மால் மாவட்டத்திற்குச் சென்றிருந்தார்.
பலியானவர்கள் அனைவரும் அகதிகள் என்று அவர் கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)