உலகம்

ஹலால் சான்றிதழுக்கான விண்ணப்பம் தன்னார்வ அடிப்படையிலானது

29/12/2024 06:13 PM

ஆப்கானிஸ்தான், 29 டிசம்பர் (பெர்னாமா) -  எந்தவொரு தரப்பினரும் மலேசிய ஹலால் அங்கீகார சான்றிதழ் SPHM-க்கு விண்ணப்பிக்கக் கட்டாயப்படுத்தும் சட்டம் எதுவும் இல்லை.

மாறாக, அதற்கான விண்ணப்பம் தன்னார்வ அடிப்படையிலானது என்று மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் சிராஜுடின் சுஹாய்மி தெரிவித்தார்.

நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அனைத்து தரநிலைகள் மற்றும் அமலாக்கத்தில் உள்ள சட்டங்களைப் பின்பற்றத் தயாராக இருக்கும் எந்தவொரு தரப்பினரும் SPHM-மிற்கு விண்ணப்பிக்கலாம் என்று அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஹலால் சான்றிதழ் தரநிலைகளுக்கு எப்போதும் பின்பற்றுவதற்கு, அச்சான்றிழைக் கொண்டிருப்பவர்களுக்கு SPHM  கூடுதல் மதிப்பை வழங்குவதாக டத்தோ டாக்டர் சிராஜுடின் கூறினார்.

இதனிடையே, உணவக உரிமையாளர்கள் தங்களின் வணிக உரிமத்தை புதுப்பிப்பதற்கு முன்னதாக SPHM-ஐ கொண்டிருப்பதை கட்டாயமாக்கி இருக்கும் ஊராட்சி துறை PBT-இன் நடவடிக்கை, SPHM கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான அத்துறையின்  முயற்சியாகும் என்று சிராஜுடின் தெரிவித்தார் 

எனினும், உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் குழப்பத்தைத் தவிர்க்க, இதன் தொடர்பில் PBT முழுமையான விளக்கத்தை அளிக்கும் என்று தமது தரப்பு நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)