விளையாட்டு

சொந்த கிளப்பை தொடங்கலாம் - கிறிஸ்டியானோ ரொனால்டோ  

29/12/2024 06:24 PM

துபாய், 29 டிசம்பர் (பெர்னாமா) -  உலகில் தமக்கென கோடிக்கணக்கிலான ரசிகர்களை ஈர்த்துள்ள காற்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சொந்த கிளப்பை துவங்க ஆர்வம் கொண்டுள்ளார்.

காற்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அக்கிளப்பை துவங்கலாம் என்று அவர் கூறுகிறார்.

"நான் ஒரு பயிற்றுநர் இல்லை. நான் ஒருபோதும் பயிற்றுநராகவோ அல்லது கிளப்பின் நிர்வாகியாகவோ இருக்கப் போவதில்லை. ஒருவேளை இல்லை, ஒருவேளை கிளப்பின் உரிமையாளராக இருக்கலாம். ஆம்,'' என்றார் அந்த காற்பந்து நட்சத்திரம்.

வெள்ளிக்கிழமை, ஐக்கிய அரபு சிற்றரசு, துபாயில் நடைபெற்ற உலக காற்பந்து விருதுகள் நிகழ்ச்சியில் நடைபெற்ற கலந்துரையாடலில் ரொனால்டோ அவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே, அண்மைய காலமாக மென்செஸ்டர் சிட்டி எதிர்நோக்கி வரும் சிக்கல்களில் இருந்து மீள்வதற்கான வழியைக் கண்டறிய தாம் முயன்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இம்முறை நடைபெற்ற உலக காற்பந்து விருதுகள் நிகழ்ச்சியில், இங்கிலாந்தின் Jude Bellingham மற்றும் பிரேசிலின் Vinicius Junior ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)