பொது

இரண்டு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட தொழிற்சாலை ஊழியர்

30/12/2024 06:46 PM

கோலா பெராங், 30 டிசம்பர் (பெர்னாமா) - கடந்த வாரம் சிறுவர் பாலியல் துன்புறுத்தல் செய்யும் பொருள்கள் மற்றும் ஆபாச காணொளிகளை வைத்திருந்ததாக தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளைத் தொழிற்சாலை ஊழியர் ஒருவர், இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இம்மாதம் 23ஆம் தேதி, திரெங்கானு, மாராங் அருகே உள்ள கம்பன் படங்கனில் அக்குற்றத்தைப் புரிந்ததாக 33 வயதுடைய முஹமட் அஃபாண்டி முகமட் அஸி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

2017ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் செக்‌ஷன் 10-இன் கீழ் முஹமட் அஃபாண்டி மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

8,000 ரிங்கிட் ஜாமீன் தொகை மற்றும் தனிநபர் உத்தரவாதத்தின் பேரில் அந்நபரை விடுவிடுக்க மாஜிஸ்திரேட் சூர் அஸுரீன் ஜைனால்கெஃப்லி அனுமதி அளித்தார்.

அந்நபருக்கான குற்றத்தை வழங்க இவ்வழக்கு அடுத்தாண்டு ஜனவரி 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)