பொது

தரநிலையைப் பின்பற்றாத வாகன உரிமையாளரை விசாரிப்பதற்கு எஸ்.பி.ஆர்.எம்-க்கு ஜேபிஜே ஒத்துழைக்கும்

02/01/2025 08:03 PM

புத்ராஜெயா, 02 ஜனவரி (பெர்னாமா) -- கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம், புஸ்பாகோம் அங்கீகரித்த தரநிலையைப் பின்பற்றாத வாகன உரிமையாளரை விசாரிப்பதற்கு, மலேசிய ஊழல்ல் தடுப்பு ஆணையத்திற்கு சாலை போக்குவரத்து துறை, ஜேபிஜே ஒத்துழைப்பு வழங்கும்.

அந்த விசாரணை தொடர்பான அறிக்கையைத் தங்கள் தரப்பு தயார் செய்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

அதோடு, புஸ்பாகோம் ஊழியரை உட்படுத்திய நேர்மை நெறி விவகாரங்களை அடையாளம் கண்டும் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட விவகாரம் தொடர்பில், ஜேபிஜே-விடம் விளக்கமளிக்க இதுவரை புஸ்பாகோமின் மூன்று ஊழியர்கள் அழைக்கப்பட்டுள்ளதை லோக் சுட்டிக்காட்டினார்.

"எஸ்.பி.ஆர்.எம். உடன் இணைந்து கடுமையான நடவடிக்கையை எடுக்க நாங்கள் சற்றும் தயங்க மாட்டோம். எனவே, நாங்கள் தொடர்ந்து விசாரிப்போம்," என்றார் அவர்.

இன்று புத்ராஜெயா கூட்டரசுப் பிரதேசத்திற்கான புதிய ஜேபிஜே அலுவலகத்தைத் திறந்த வைத்தப் பின்னர் பேசிய லோக் அவ்வாறு கூறினார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 1130 (ஆஸ்ட்ரோ 502)