கோலா லங்காட், 02 ஜனவரி (பெர்னாமா) -- கடந்த சனிக்கிழமை கோலா லங்காட், சுங்கை சங்காங் (Changgang) RTB-இல் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதன் மரபணு சோதனை முடிவை மலேசிய வேதியியல் துறை இன்று வெளியிட்டது.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி காணாமல் போன பதினைந்து வயது யாப் சின் யுவான் எனும் பெண்ணின் சடலம் அது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
அச்சோதனை முடிவு குறித்து அப்பெண்ணின் குடும்பத்திடம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரின் சடலமும் அவர்களிடம் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டுவிட்டதாக அறிக்கை ஒன்றில் டத்தோ ஹுசேன் கூறினார்.
இவ்வழக்கு, குற்றவியல் சட்டம் செக்ஷன் 302-இன் கீழ் விசாரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு அப்பெண்ணின் 16 வயது காதலன் உட்பட 20 மற்றும் 51 வயதுடைய இரு ஆடவர்களை போலீஸ் கைது செய்ததாக இதற்கு முன்னர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
செராசில் சிங்க நடனப் பயிற்சிக்கு சென்றிருந்த அப்பெண் காணாமல் போனதாக புகாரளிப்பட்டது.
-- பெர்னாமா
[பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)]