கோலாலம்பூர், 30 டிசம்பர் (பெர்னாமா) - கெடா, லங்காவி தீவின் மேம்பாட்டிற்கும் சுற்றுலா தொழில்துறையின் வளர்ச்சிக்கும் பல்லுயிர் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இன்று தமது முகநூல் பதிவில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அத்தகவலைத் தெரிவித்தார்.
பல்கலைக்கழகங்களின் கிளைகள் உட்பட அத்தீவில் உள்ள மக்களுக்குப் பலனளிக்கும் சில திட்டங்கள் விரைவுப்படுத்தப்படும் என்று பிரதமர் கூறினார்.
இதன் தொடர்பில் லங்காவி மேம்பாட்டு வாரியத் தலைமை செயல்முறை அதிகாரியுடன் தாம் சந்திப்பு மேற்கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அக்கூட்டத்தில் மாவட்ட அதிகாரியும் லங்காவி மாவட்ட போலீஸ் தலைவரும் கலந்து கொண்டனர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)