உலகம்

வீடு திரும்ப மறுத்த கணவரை தாக்கிய மனைவி

30/12/2024 07:12 PM

பேங்காக், 30 டிசம்பர் (பெர்னாமா) --    பேங்காக், பத்தாயாவில் பணியிடத்தில் ஏற்பட்ட சண்டையின் போது தமது கணவரின் முகத்தை கத்தியால் கீறிய மனைவியின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலை முடிந்து வீடு திரும்ப மறுத்த கணவரின் செயல் தமக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், அவர் அவ்வாறு தாக்கியதாக டைகர் செய்தி தளம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்டவரின் மூக்கு மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்குப் போலீஸ் விரைந்தபோது மனைவி வேகமாக அங்கிருந்து தப்பித்து ஓடியதாக கூறப்படுகின்றது.

எனினும், கட்டுமான பணியாளராக பணிப்புரியும் தமது கணவரை சந்திப்பதற்காக முன்னதாக அவர் அப்பகுதிக்கு வந்துள்ளார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)