புத்ராஜெயா, 04 ஜனவரி (பெர்னாமா) - முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கான ஆதரவு பேரணிக்கு மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை அரச மலேசிய போலீஸ் படை, பி.டி.ஆர்.எம் நிராகரித்துள்ளது.
சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் முழுமையடையவில்லை என்பதால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக போலீஸ் விளக்கம் அளித்திருக்கிறது.
வரும் திங்கட்கிழமை, நஜிப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தில் பேரணி நடத்த கடந்த செவ்வாய்க்கிழமை விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டதாக புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி. ஐடி ஷாம் முஹமட் தெரிவித்தார்.
விண்ணப்பத்தை சரிபார்த்ததில் அது முழுமையடையாமல் இருப்பது கண்டறியப்பட்டதால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இருப்பினும், பாதுகாப்பு கருதி புத்ராஜெயா நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் படையை சேர்ந்த 456 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்று ஐடி ஷாம் தெரிவித்தார்.
பேரணிக்கான விண்ணப்பம் நிகாரிக்கப்பட்டதை நேற்று ஏற்பாட்டாளரிடம் தெரிவிக்கப்பட்டது.
அரச மன்னிப்பு ஆணை தொடர்பாக நஜிப் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் ஜனவரி 6ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் செவிமடுக்கவுள்ளது.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)