முவான், 05 ஜனவரி (பெர்னாமா) -- தென் கொரியாவில் நிகழ்ந்த JEJU AIR விமான விபத்தில் உயிரிழந்த அனைவரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டன.
விபத்தில் பலியான 179 பேரின் உடல்கள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் தென் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
இக்கோர விபத்தில் பலியான அனைத்து பயணிகளும் கடந்த புதன்கிழமை அடையாளம் காணப்பட்டதாக அமைச்சு கூறியது.
விமானத்தின் கருப்பு பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய சிறப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
விமானம் மீது பறவைகள் மோதியிருக்கலாம் என்றும் தரையிறக்குவதற்கான கருவியில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி பேங்காக் நகரிலிருந்து தென் கொரியாவை நோக்கிப் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது.
விபத்தில் 179 பேர் உயிரிழந்தவுடன் இருவர் உயிர்த் தப்பினர்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)