விளையாட்டு

'சும்பாங்செ' கிண்ணத்தை வென்றது திரெங்கானு ஹாக்கி அணி

05/01/2025 05:28 PM

புக்கிட் ஜாலில், 05 ஜனவரி (பெர்னாமா) --   'சும்பாங்செ' ஹாக்கி கிண்ண போட்டியின் நடப்பு வெற்றியாளரான Tenaga Nasional நிறுவனம், TNB அணியை, 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தி திரெங்கானு ஹாக்கி அணி அக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.

கடந்த பருவத்தில் தி.என்.பி அணியிடம் தோல்விக் கண்ட திரெங்கானு ஹாக்கி அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக அக்கிண்ணத்தை வெல்லும் அவ்வணியின் இலக்கையும் முறியடித்தது.

நேற்று, புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கில் நடைபெற்ற இவ்வாட்டத்தில் இரு அணிகளும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் முதல் பாதி ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது.

பெனால்டி பகுதியிலிருந்து நான்கு வாய்ப்புகள் திரெங்கானு ஹாக்கி அணிக்கு கிடைத்த வேளையில்,  தி.என்.பி மத்திய திடலிருந்து கோல் போடும் இரு வாய்ப்பை பெற்றது.

ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் தி.என்.பி அணியைச் சேர்ந்த தென்கொரிய ஆட்டக்காரர் ஜங் ஜொங் யுன் முதல் கோலை அடித்தபோதிலும், அடுத்த 3-வது நிமிடத்தில் திரெங்கானு ஹாக்கி அணியின் ஃபைசால் சாரியும் தமது அணிக்கான முதல் கோலை போட்டார்.

அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் தெங்கு அஹ்மட் தஜூடின் தெங்கு அப்துல் ஜலில், திரெங்கானு ஹாக்கி அணி க்கான இரண்டாவது கோலை அடித்து அவ்வணிக்கான வெற்றியை உறுதி செய்தார்.

''இன்றைய ஆட்டக்காரர்கள் தொடக்கத்திலிருந்தே உண்மையாகவே விளையாடுகிறார்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலையை அவர் ஏற்கனவே அமைத்துக் கொண்டனர். எந்த பெனால்டியும் இல்லாமல் இன்று வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தனர். ஆம், எங்களிடம் சில குறைபாடுகள் இருப்பதைச் சரிசெய்ய நாங்கள் முயற்சிப்போம். பயிற்சி அமர்வுக்கு, குறிப்பாக நமது விளையாட்டாளர்கள் மற்றும் இறக்குமதி ஆட்டக்காரர்களுக்கு இடையிலான கலவையின் அடிப்படையில். கூடிய விரைவில் அந்த கலவையை நாம் பெற வேண்டும்'', என்று அவர் கூறினார்.

திரெங்கானு ஹாக்கி அணியின் இந்த வெற்றி, தொடர்ச்சியாக கிண்ணத்தை வென்ற தி.என்.பி-இன் வெற்றிப் பயணத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 
(ஆஸ்ட்ரோ 502)