பொது

சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 63,652 மோசடி உள்ளடக்கங்களை எம்.சி.எம்.சி நீக்கியது

04/01/2025 06:28 PM

கூலாய், 04 ஜனவரி (பெர்னாமா) - கடந்த ஆண்டில் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட 63 ஆயிரத்து 652 மோசடி உள்ளடக்கங்களை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், எம்.சி.எம்.சி நீக்கியிருக்கின்றது.

அந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் நீக்கப்பட்ட 6 ஆயிரத்து 297 உள்ளடக்கங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுவதாக
தொடர்பு துணை அமைச்சர்,  தியோ நீ சிங் தெரிவித்தார்.

அடையாளம் காணப்பட்ட இணைய மோசடிகளில், deepfake போன்ற செயற்கை நுண்ணறிவு AI பயன்பாடு, பிரபலமானவர்கள் போன்ற ஆள்மாறாட்டம் செய்தல், காணொளிகள், வரைகலை மற்றும் பேச்சு ஆகியவை அடங்கும் என்றும் தியோ கூறினார்.

இன்று, ஜோகூர், ஃபெல்டா புக்கிட் பெர்மாய் சமூக மண்டபத்தில் நடைபெற்ற கம்போங் அங்காட் மடானி திட்டத்தில் கலந்துக் கொண்டபோது, செய்தியாளர்களிடம் பேசிய தியோ அவ்வாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் மோசடி தொடர்பான புள்ளிவிவரங்கள் மற்றும் நாட்டில் உள்ள சில பிரபலங்கள் சம்பந்தப்பட்ட டீப்ஃபெக் குறித்து வினவப்பட்டபோது அவர் அதனைக் குறிப்பிட்டார்.

-- பெர்னாமா

பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30 (ஆஸ்ட்ரோ 502)