ஜாலான் பினாங், 09 ஜனவரி (பெர்னாமா) -- ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை சந்திக்கவிருக்கின்றார்.
மலேசியாவை, குறிப்பாக சரவாக் மாநிலத்தைப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையமாக உருவாக்கும் பரிந்துரையையும் அவர்கள் விவாதிக்கவிருப்பதாக அன்வார் கூறினார்.
''நாங்கள் சில முதலீடு மற்றும் வர்த்தக பிரச்சனைகள் குறித்து பேசுவோம். பெட்ரோனாஸுடன் இணைந்து சரவாக் பிரீமியர் அபாங் ஜோவின் முயற்சிகளின் அடிப்படையில் ஆற்றல் மாற்றத்தின் மிகவும் முக்கியமான ஒரு புதிய திட்டம் குறித்த விவாதம். எனவே, அக்கலந்துரையாடலின் வழி மலேசியாவைக் குறிப்பாக, சரவாக் வட்டாரத்தை ஆற்றல் மையமாக மாற்ற திட்டமிடுவோம் என்று நம்புகிறோம்'', என்றார் அவர்.
இன்று, கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசியப் பொருளாதார மாநாட்டின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது டத்தோ ஶ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா
பெர்னாமா செய்திகள் நேரலை: இரவு 7 மணி மறுஒளிபரப்பு: இரவு 11:30
(ஆஸ்ட்ரோ 502)